2019ல் அடியெடுத்து வைக்கும் கன்னி ராசி நேயர்களே, இந்த வருடம் முக்கிய கிரகங்களான குரு பகவான் 3-ம் வீட்டிலும், சனி பகவான் 4-ம் வீட்டிலும் சஞ்சரித்துள்ளதால் பொருளாதாரம் ஏற்ற இறக்கமான நிலையில் இருக்கும். இந்த புத்தாண்டு எல்லா விதத்திலும் சாதகமான பலனை தரும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் நாளடைவில் நடந்து விடும். பண வரவு அதிகரிக்கும். மனோபலம் கூடும். உடல் நலம் சீராகும். பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். செலவுகளைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஓரளவிற்கு வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பண சேமிப்பில் அதிக கவனம் செலுத்தவும். உடன்பிறந்தோரால் குறிப்பிடத்தகுந்த ஆதாயத்தினைக் பெற முடியும். சொத்துப் பிரச்னைகள், பாகப்பிரிவினை சம்பந்தப்பட்ட விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். புதிய மனிதர்களை நம்பி பெரிய காரியங்கள் எதிலும் இறங்க வேண்டாம். பிரயாணத்தின்போது மிகுந்த கவனத்துடன் இருக்கவும். நண்பர்கள் வகையில் பல நன்மைகள் கிடைக்கும். வங்கி கணக்கில் பணம் கணிசமாக உயரும். நண்பர்கள் உங்களை தேடி வந்து உதவி செய்வர். கணவன் மனைவியிடையே ஈகோ பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்வது நல்லது. தேவையற்ற ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். தந்தை வழியில் இருந்த சொத்து பிரச்சனை தீரும். சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதிய வண்டி, வாகன சேர்க்கை உண்டு. வெளிநாடு சென்று வரும் பாக்கியம் கிட்டும். மனதில் தேவையில்லாத விஷயங்களை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். மற்றவர்களிடம் பேசும் போது வார்த்தையை அளந்து பேசவும். உடன்பிறப்புகளிடம் விட்டு கொடுத்து போகவும். உறவினர்களிடம் பண விஷயத்தில் மனஸ்தாபம் வர வாய்ப்புள்ளது, ஆகையால் கவனமாக இருக்கவும். எப்போதும் சம்பந்தமில்லாத விஷயத்தில் கவனம் செலுத்துவதை தவிர்க்கவும். முக்கிய காரியங்களில் ஏதேனும் தடை ஏற்பட்டால் தெய்வ வழிபாட்டின் மூலம் அதை சரி செய்து கொள்ளவும். குடும்பத்தில் பிரச்சனைகள் ஏதும் வராமல் பார்த்துக்கொள்ளவும். கொடுக்கல் வாங்கலில் சிக்கலான சூழ்நிலையே காணப்படும். உத்யோகத்தில் எதையும் சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் உங்களிடம் இருக்கும். உத்யோகத்தில் உயர் அதிகாரிகள் ஆலோசனை பல வகையில் உதவியாக இருக்கும். தொழில், வியபாரத்தில் பல புதுமையான விஷயங்களை செய்ய முடியும். தொழில், வியாபாரத்தில் யாரை நம்புவது என்ற குழப்பம் ஏற்படும். உங்கள் கடுமையான உழைப்பால் இந்த புத்தாண்டில் பல சாதனைகளை படைக்க போகிறீர்கள்.
பரிகாரம்: இந்த வருடம் முழுவதும் திருநீர்மலையில் உள்ள ரங்கநாத பெருமாளை வணங்கி வழிபடவம்.
முக்கிய குறிப்பு : இந்த 2019ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831